நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவை இந்தியா அதிகம் நம்பியிருப்பதைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும் உதவும் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.

களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நம்மால் செய்ய முடியாத சூழ்நிலை ஏன் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள சீதாராமன், சோப் பாக்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது தூபக் குச்சிகள் போன்ற வீட்டுப் பொருட்கள் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் போது தன்னம்பிக்கைக்கு துணைபுரியும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.