2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலைக்கு போகமுடியாது..! அரசு அதிரடி முடிவு..!

அசாம் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அசாம் மக்கள் தொகை மற்றும்

By murugan | Published: Oct 23, 2019 09:40 AM

அசாம் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அசாம் மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் கொள்கை மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் படி 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் பெற்றோர்கள் அரசு வேலை வேலை கிடையாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த விதிமுறை வருகின்ற  2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மக்கள்தொகை சரிபார்க்கும் நோக்கில் இந்த கொள்கை கொண்டுவர உள்ளதாக நேற்று முன்தினம் மாலை அசாம் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.அதே போல் தற்போது அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு கூறியுள்ளது. இதுகுறித்து அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறுகையில் , "நிலத்தில் இருக்கும் நெருக்கடியை  குறைக்கவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நிலம் இல்லாத குடும்பங்களுக்கு நிலம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc