ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த எஸ்.பழனிச்சாமி பேரூராட்சிகளின் இயக்குரனாக நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள எல்.சுப்பிரமணியன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.மேலும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக கோவிந்த ராவும் , விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஆர்.கண்ணணும் ,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 

author avatar
murugan