iPhone 12 series: கடும் எதிர்பார்ப்புகளுக்கு பின் வெளியானது.. அதிவேகமான A14 பயோனிக் சிப், கேமரா, பேட்டரி விவரங்கள்!

உலகம் முழுவதும் ஐபோன் 12 போன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ள நிலையில், ஆப்பிள் தனது ஐபோன்-12 சீரியஸை நேற்று இரவு வெளியிட்டது.

ஆப்பிள் நிறுவனம், ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்துள்ளது. இனி வரும் எந்த ஐபோனில் சார்ஜர் இருக்காது என ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்த நிலையில், இந்த ஐபோன் 12 சீரியஸில் சார்ஜர் இல்லை. மேலும், ஐபோன் 12 சீரியஸ் அனைத்துமே 5G ஆதரவுடன் வருகிறது.

A14 பயோனிக் சிப்:

இந்த ஐபோன் 12 சீரியஸில் அதிகளவில் பேசப்படுவது, அதன் இதயமான A14 பயோனிக் சிப் ஆகும். இது, உலகிலே அதிவேகமான சிப் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் நான்காம் தலைமுறை நியூரல் எஞ்சினுடன் வருகிறது. இந்த சிப், ஐ பேட் ஏர்-ல் இருந்தது.

இந்த A14 பயோனிக் சிப்-ல் 4K வீடியோ எடிட்டிங் உள்ளிட்டவைகளை மிக எளிதாக செய்ய முடியும். இது, தற்போதுள்ள A13 பயோனிக் சிப்பை விட CPU செயல்திறனில் 40 சதவிகித ஊக்கத்தையும், 30 சதவிகித முன்னேற்றத்தை கிராபிக்ஸில் கண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் 16-கோர் நியூரல் என்ஜின், வினாடிக்கு 11 டிரில்லியன் வரை செயல்படும் திறன் கொண்டது. இந்த ஐபோன் 12-ல் உள்ள CPU, இரண்டாம் தலைமுறை மெஷின் லேர்னிங் கால்குலேஷன்ஸ் உள்ளன. அதுமட்டுமின்றி, Geekbench listing-ல் பெஞ்ச்மார்க்ஸ் பரிசோதனையில், புதிய A14 பயோனிக் சிப் சிங்கிள் கோர் பரிசோதனையில் 583 புள்ளிகளும், மல்டி கோர் பரிசோதனையில் 4198 புள்ளிகள் பெற்றுள்ளது.

டிஸ்பிளே:

ஐபோன் 12 மினி-ல் 5.4 இன்ச் டிஸ்பிளேவும், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ ஆகியவையில் 6.1 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. இறுதியாக, ஹையர் வேரியன்டான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்-ல் மிகப்பெரிய டிஸ்பிளே அளவான 6.7 இன்ச்-ஐ கொண்டுள்ளது. இந்த நான்கு போன்களும் சூப்பர் ரெட்டினா XDR (OLED) பேனல்கள் கொண்டுள்ளது.

மேலும், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி-ல் ரெடினா எல்சிடி பேனல்களுக்கு பதிலாக OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது, புதிய கிளாஸ் + செராமிக் பாதுகாப்பு அடுக்குடன் கார்னரில் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற பேனலில் செராமிக் ஷீல்டு பொருத்தப்பட்டுள்ளது. இது, பழைய மாடலான ஐபோன் 5-ல் உள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.

கேமரா:

ஐபோன் என்றாலே, நாம் அனைவருக்கும் தெரிந்தது, கேமரா. இந்த ஐபோன்12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களில் 12 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமராக்கள் உள்ளது. அதில் வைட் ஆங்கிள் மற்றும் அல்ட்ரா வைட்-ஆங்கிள் வசதி கொண்டுள்ளது.மேலும் இதில் f/1.6 லென்ஸ் மற்றும் f/2.4 லென்ஸுடன் வருகிறது. ஐபோன் 12 மாடல்கள் 4 கே டால்பி விஷன் எச்டிஆர் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளது.

ஹையர் வேரியன்டான ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்-ல் 12 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் வைட் f/1.6, அல்ட்ரா-வைட் எஃப்/2.4 மற்றும் கூடுதலாக ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் வசதியும் வருகிறது. ஐபோன் 12 ப்ரோவில் f/2.0 லென்ஸ் மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்ல் f/2.2 லென்ஸ் சென்சார் உள்ளது.

கேமரா அம்சங்கள்:

நைட் மோட், நைட் மோட் போர்ட்ரெய்ட், ஆட்டோபோகஸ், டெப்த் சென்சார், மற்றும் ஏஆர் ரியாலிட்டி ஆகியவைகளை உறுதி செய்ய LiDAR ஸ்கேனர் வசதியுடன் வருகிறது. இந்த LiDAR, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்-ல் உள்ளது.

மேலும் இந்த நான்கு மாடல்களிலும் 12 மெகாபிக்சல் எஃப் / 2.2 முன்பக்க செல்பீ கேமராக்கள் உள்ளன. மேலும், ஐபோன் 12 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸில் புதிய ஆப்பிள் ProRAW வசதி உள்ளது. இதன்மூலம் போஸ்ட்-போட்டோகிராஃபி அனுபவத்தை அளிக்கிறது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்:

பேட்டரியை பொறுத்தவரை, ஐபோன் 12 மினி 15 மணிநேரமம், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ, 17 மணிநேரமும், 12 ப்ரோ மேக்ஸ் 20 மணிநேர பிளேபேக் உள்ளது. இது, 15W வரை மாக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங்கையும், 7.5W வரை குய் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கின்றன.

ஐபோன் 12 மாடல்களின் பாக்சில், Usb-C to lightning கேபிளுடன் வருகிறது. இதில் சார்ஜர் வராது. இந்த 12 சிரியசில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இதில் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

விலை பட்டியல்:

ஐபோன் 12 மினி:

64GB: ₹69,900
128GB: ₹74,900
256GB: ₹84,900

ஐபோன் 12:

64GB: ₹79,900
128GB: ₹84,900
256GB: ₹94,900

ஐபோன் 12 ப்ரோ:

128GB: ₹1,19,900
256GB: ₹1,29,900
512GB: ₹1,49,900

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்:

128GB: ₹1,29,900
256GB: ₹1,39,900
512GB: ₹1,59,900

இந்த ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ, அக்டோபர் 30 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், நவம்பர் 6 முதல் ப்ரீ-ஆர்டர் தொடங்கப்பட்டு, நவம்பர் 13 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்தது. இத்துடன் ஆப்பிள் ஸ்பீக்கரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அது, ரூ.7,500 முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.