ஹெல்மட் அணியாவிட்டால் இந்த ஊர் முக்கிய சாலைகளில் பைக்கில் செல்ல முடியாது!

சாலையில் ஹெல்மெட் போடாத காரணத்தால் விபத்துகளின் போது நிறைய உயிரிழப்புகள்

By manikandan | Published: Jul 12, 2019 12:22 PM

சாலையில் ஹெல்மெட் போடாத காரணத்தால் விபத்துகளின் போது நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த சாலை விதிகளில் பல கட்டுப்பாடுகள் விதித்தும். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலையில் ஓசூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய புதிய யுத்திகளை கையாண்டு வருகிறது. இதன்படி, ஓசூர் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாவிட்டால், அவர்களை அந்த முக்கிய சாலைகளில் போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் எமதர்மனை போன்று ஒருவர் வேடமணிந்து சாலைகளில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடிக்கைகள் காட்டப்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc