நாளை முதல் 19-ஆம் தேதி வரை விடுமுறை-வெளியான அறிவிப்பு

பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை(ஜனவரி

By venu | Published: Jan 10, 2020 11:45 AM

  • பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • நாளை(ஜனவரி 11) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், போன்ற விடுமுறையின் போது பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.குறிப்பாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் பயிற்சித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அவரது அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை(ஜனவரி 11) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc