வரலாற்றில் இன்று(09,03,2020)… வண்ணமயமான ஹோலி பண்டிகை இன்று…

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம்  பவுர்ணமி தினத்தில் இந்தியாவில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். இப்பண்டிகையை தொடர்ந்து 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்கள் அனைவரிடமும் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்த ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இதை  முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அலுவலக மற்றும் உயிர் நண்பர்கள், வியாபார பிரமுகர்களை இந்நாளில் மகிழ்சியாக  வரவேற்பார்கள். அவர்கள் தங்களது நண்பர்களின் முகங்களில் வண்னப்பொடியை  பூசியும், கட்டி அணைத்தும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பல்வேறு வகை இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியடைவார்கள். 

author avatar
Kaliraj