2 வயது குழந்தைக்கு HIV தொற்று ரத்தம்…கோவையில் பரபரப்பு…!!

  • விருதுநகரில் கர்பிணிப்பெண்ணுக்கு HIV தொற்று ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
  • கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் சித்ரா தம்பதிகள் இந்த தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் மற்றும் பெண் குழந்தை என்று இரட்டை குழந்தைகள் பிறந்தது. இரண்டு வயதாகும் இந்த குழந்தையில் பெண்குழந்தைக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் ஜூலை மாதம் உடல்நிலை சரியில்லாமல் போனதால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு இருதய நோய் இருப்பதாகவும் , மேல்சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆணும்,அனுமதியுங்கள் என்றும் அவர் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதித்து குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தைக்கு இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி இரத்தம் செலுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது குழந்தைக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.கடந்த 6_ஆம் தேதி கோவை மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்தனர் . அந்த குழந்தையை மீண்டும் பரிசோதித்துப் பார்த்தபோது அந்த குழந்தைக்கு ஹெச் ஐ வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  மருத்துவமனையி டீன் அசோகன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே விருதுநகரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச் ஐ வி ரத்தம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment