கோலி சாதனையை முறியடித்து பதிலடி கொடுப்பாரா ஹிட்மேன்..!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய அணி உடன்  3 டி20 போட்டிகளில்

By murugan | Published: Sep 22, 2019 08:45 AM

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய அணி உடன்  3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 தர்மாசலாவில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டி மொஹாலியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து இன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.இந்நிலையில் இரண்டாவது போட்டியில் கேப்டன் கோலி 72 ரன்கள் அடித்து டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்த ரோஹித் சாதனையை முறியடித்தார்.தற்போது கோலி 2441 ரன்னும் , ரோஹித் 2434 ரன்னுடன் உள்ளனர். இன்றைய போட்டியில்  6 ரன்கள் அடித்து கோலியின் சாதனையை முறியடித்து ரோஹித் பதிலடி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 6 ரன்கள் எடுத்தால் மீண்டும் முதலிடத்தை ரோஹித் பிடிப்பார்.
Step2: Place in ads Display sections

unicc