விமானத்தில் தவான் தனியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்ட ஹிட்மேன்..!

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

By murugan | Published: Sep 22, 2019 09:30 AM

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. பின்னர் நடந்த  இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு விமானத்தில் சென்றபோது ஷிகர்  தவான் தனியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தவான் என்னிடம் பேசவில்லை கற்பனையில் உள்ள நபரிடம் பேசும் அளவிற்கு அவருக்கு வயதாகிவிட்டது என விடியோவை பதிவிட்டிருந்தார்.
 
View this post on Instagram
 

No no he isn’t talking to me! And he’s too old to have an imaginary friend. Why so loco jattji ?‍♂️?‍♂️ @shikhardofficial

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

இதற்கு பதிலளித்த தவான், நான் ஒரு கவிதையை சொல்லி பழகி வந்தேன். அப்போது ரோகித் வீடியோ எடுத்து விட்டார்.அந்த கவிதையை இன்னும் கூட சொல்லி பழகி இருந்திருக்கலாம் என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc