வரலாற்றில் இன்று(25.01.2020)… இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்த தினம் இன்று…

  • இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்த தினம் இன்று.
  • இந்நாளில் இவரை நினைவு கொள்வோம்.

இந்திவாவில் முதல் அறிவியலாளர் என்ற சிறப்பை பெற்றவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஆவர்,இவர் ஜனவரி 24ம் நாள், 1922ம் ஆண்டு பிறந்தார். அத்தகய காலங்களில் பெண்களுக்க கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்த காலத்தில் கல்வி கற்று  இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என்ற நிலையை அடைந்தவர் ஆவர். இவர் சிறப்பாக கல்வி கற்று நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் ஒரு சிறந்த முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 1949ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் மின் பொறியியல் துறையில் முதுகலை பட்டத்தை  பெற்றார் .

Image result for rajeswari chatterjee

தனது கல்வியை முடித்துவிட்டு இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியராக உயர்வு பெற்றார். பின்  இவர் அந்த கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது சிறந்த ஆய்வுக்கட்டூரைக்காக  மவுண்ட்பேட்டன் பரிசு (இங்கிலாந்து)   மின் மற்றும் வானொலி பொறியியல் கழகம் வழங்கியது. ஜேகதிஸ் சந்திர போஸ் நினைவு பரிசை   சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்காக பொறியாளர்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கபட்டது.  ராம்லால் வாத்வா விருது  சிறந்த ஆராய்ச்சி மற்றும் விரிவுரையின் மூலம் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கடின கல்வி போராட்டம் நடத்தி சிறந்த நிலையை அடைந்த இவர் செப்டெம்பர் மாதம் 3ம் நாள் .2010ம் ஆண்டு தனது  88வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

author avatar
Kaliraj