வரலாற்று சாதனை படைத்த இந்தியா..!  இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி ..!

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில்

By murugan | Published: Oct 13, 2019 03:20 PM

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601 ரன்கள் எடுத்து இருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து.இது தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கப்பட்டது. இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா ஆட்டம் தொடக்கத்திலேயே முக்கிய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதமாக விளையாடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனால் இந்திய அணி  இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் அதிக பட்சமாக டீன் எல்கர் 48 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா ,உமேஷ் தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11 முறை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற அணிகள் சொந்த மண்ணில் 11 முறை தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை என்று குறிப்பிட தக்கது.
Step2: Place in ads Display sections

unicc