ஏலக்காயில் உள்ள எக்கச்சக்கமான மருத்துவகுணங்கள் இதோ!

Here are some of the great medical qualities of cardamom!

இஞ்சி வகையை சார்ந்த ஒரு வாசனை பொருள் தான் சின்னதாக இருக்கக்கூடிய இந்த ஏலக்காய். இது வாசனை பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஜீரண உறுப்பு கோளாறுகளை போக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்க கூடிய ஒரே மருந்து ஏலக்காய் தான். எதற்காக பாயாசம் மற்றும் பிரியாணியில் ஏலக்காய் எல்லாம் போடுகிறார்கள் என கேட்டால், சொல்பவர்கள் என வாசத்திற்காக போடுகிறார் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அது மட்டும் கிடையாது அதன் பயன்களை நாம் பார்ப்போம்

ஏலக்காயின் பயன்கள் மருத்துவ குணங்கள்:

உணவில் சேர்க்க கூடிய ஏலக்காய் நச்சுத் தன்மைகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு நீர் மற்றும் கிருமிகளை வெளியேற்றி சிறுநீரக மண்டலத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜலதோஷம், மூக்கடைப்பு போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு இந்த ஏலக்காய் மிகவும் நிவாரணம் அளிக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. புற்று நோயைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டது. வெயிலில் செல்லும் போது ஏற்படக்கூடிய தலைசுற்றல் வாய்வு தொல்லை மற்றும் தொடர்ந்து விக்கல் ஆகியவை நிற்பதற்கும் ஏலக்காய் மிகுந்த உதவி செய்கிறது. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு மட்டுமல்லாமல் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் இது போக்குவதற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.