தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன?

நெல்லி கனி என்றாலே எப்போதும் ஒரு தனி சிறப்பு இருக்கத்தான் செய்யும். மற்ற பழங்களை

By Hari | Published: Jan 24, 2019 11:50 AM

நெல்லி கனி என்றாலே எப்போதும் ஒரு தனி சிறப்பு இருக்கத்தான் செய்யும். மற்ற பழங்களை காட்டிலும் இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. நாம் தினமும் நெல்லியை சாப்பிட்டு வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என பழங்கால சித்தர்கள் குறிப்பு எழுதி வைத்துள்ளனர். வெறும் நெல்லியை சாப்பிட்டாலே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றதென்றால், இதை எல்லா வகையான மருத்துவத்திலும் பயன்படுத்தும் தேனுடன் கலந்து சாப்பிட்டால் நம் உடலுக்கு எப்படிப்பட்ட நற்பயன்கள் கிடைக்கும் என்பதை சிந்தியுங்கள். குழந்தை இன்மை குறைபாடு முதல் உடல் நச்சுக்கள் வெளியேற்றுதல் வரை அனைத்தையும் சரி செய்கிறது இந்த நெல்லியும் தேனும். இவற்றின் முழு பயனையும் இனி அறிவோம். நச்சுக்கள் நமது உடலில் நீண்ட காலமாக தேங்கி உள்ள எல்லா வித நச்சுக்களையும் வெளியேற்ற நெல்லியும் தேனும் அற்புதமாக உதவுகிறது. குடல் பகுதியில் அழுக்குகளை சுத்தம் செய்து, அவற்றை வெளியேற்றுகிறது. எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தேனில் ஊற வைத்த நெல்லியை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டால் பலன் அதிகம். இனப்பெருக்க உறுப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இனபெருக்க உறுப்பில் ஏற்பட கூடிய எல்லா வித நோய் தொற்றுகளுக்கு நெல்லிக்கனியையும் தேனையும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே குணமாகி விடும். பெண்களுக்கு ஏற்படா கூடிய மாதவிடாய் வலியும் குணமாகும். கல்லீரல் கல்லீரலை பல்வேறு வகையான நோய்களில் இருந்து காக்கும் தன்மை நெல்லியிற்கும் தேனிற்கும் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம். கல்லீரலில் உள்ள அழுக்களை சுத்தம் செய்யவும் இது உதவும். இளமை அதிக காலம் இளமையாக வைத்து கொள்ள தேனில் ஊறிய நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலே சிறந்தது. இவை சருமத்தின் அழகை அதிகரிப்பதோடு, செல்களை புத்துணர்வூட்டும். இதற்கு முக்கிய காரணி வைட்டமின் சி தான். சளி, இரும்பல் 1 ஸ்பூன் தேனில் ஊற வைத்த நெல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும், தொண்டை வறட்சியை குணப்படுத்தவும், இரும்பலை குறைக்கவும் இது வழி செய்கிறது.
Step2: Place in ads Display sections

unicc