கொரோனா பரவ வாய்ப்புள்ளது – சுவிங்கம்மை ஜூன் 30ம் தேதி வரை தடை செய்த ஹரியானா அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை  50 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சுவிங்கம் மூலமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று  ஹரியானா அரசு   ஜூன் 30ம் தேதி வரை தடை செய்துள்ளது.
அதன்படி ஜூன் 30-வரை சுவிங்கம்மை விற்கவோ, வாங்கி சுவைக்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளது. சுவிங்கம் கண்ட இடங்களில் துப்பப்படுவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று ஹரியானா அரசு குறிப்பிட்டுள்ளது.