ஆங்கிலம் தெரியாததால் கஷ்டப்பட்டேன் ஹர்பஜன் ஓபன் டாக் ..!

Harbhajan Open Talk ..!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஹர்பஜன்சிங். தற்போது ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில்    தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்பட்டது தொடர்ந்து பேசி உள்ளார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய ஹர்பஜன் ,  நான் முதன்முதலாக 1998-ம் ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இந்த போட்டிக்கு முன் நடந்த அணியின் கூட்டத்தில் வீரர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசினார்கள். அப்போது எனக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே அவர்கள் என்ன பேசினார்கள் என எனக்கு தெரியவில்லை. அந்த கூட்டத்தில் என்னை பேச சொல்லி மற்ற வீரர்கள் சொன்னார்கள். ஆனால் நான் பேசவில்லை. அப்போது இந்திய கேப்டன் அசாருதீன் உனக்கு என்ன பிரச்சனை என கேட்டார். நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் தான் நான் பேசவில்லை என கூறினேன். உடனே அவர் உனக்கு என்ன மொழி தெரியும் எனக் கேட்டார். நான் பஞ்சாபி மட்டும்தான் பேசுவேன் என சொன்னேன் உடனே அவர்  நீ பஞ்சாபில் பேசு என சொன்னார். ஹர்பஜன் சிங் தனது முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தி இல்லை என்பது குறிப்பிடதக்கது