கையேந்தி பவன் ஸ்பெஷல்- சிக்கன் 65!

அரைக்கிலோ போன்லெஸ் சிக்கன் அதாவது உங்களுக்கு தேவைக்கேற்ப சிறு சிறு துண்டாகவும் அல்லது பெரிய பெறிய துண்டாகவும் வெட்டி பவுலில் வைத்து அதில் கொஞ்சம் உப்பு போட்டு மூன்று முறை அலசி எடுக்க வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் மல்லித் தூள்,ஒரு ஸ்பூன் சீரகத்தூள் கால்,ஸ்பூன் மிளகு தூள்,அரை ஸ்பூன் கறிமசாலா தூள்,ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது,ஒரு ஸ்பூன் பூண்டு விழுது,இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவு,2 டேபிள் ஸ்பூன் கான் ப்ளோர் மாவு இதன்பிறகு எலுமிச்சம்பழ சாரை பிழிந்து எல்லாத்தையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி 10 முதல் 15 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.


அதன் பிறகு தேவையான அளவு எண்ணெய் கடாயில் ஊத்தி சூடான பிறகு நமது ஊறவைத்த சிக்கனை கடாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஐந்து அல்லது ஆறு பீசை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும் அதவாது ஒரு ரெட் கலர் வந்த பிறகு எடுக்க வேண்டும் அப்போ தான் நன்றாக வெந்திருக்கும் அதன் பிறகு சூப்பரான,ருசியான,சுவையான சிக்கன் 65 கிடைக்கும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.