எச்சரிக்கை..! இந்தியாவை குறிவைக்கும் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள்..!!

தற்சமயம் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் உலகெங்கிலும் இருக்கும் பல மில்லியன் கணக்கான ரவுட்டர்களை ஹேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கணினி வலையமைப்பை உருவாக்கப் பயன்படும் இந்த ரவுட்டர்களை ஹேக் செய்வதன் ஊடாக இணைய வலையமைப்பினை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்

அமெரிக்கா மற்றும் சில நாடுகள் இணைந்து  ரஷ்யாவிற்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீடுகள், அலுவலகங்கள் என அனைத்திலும் காணப்படும் ரவுட்டர்கள் ஹேக் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ரவுட்டர்கள் தங்களது இன்டர்ஃபேசினை இணைக்கப்பட்ட சாதனத்தில் இருந்து இயக்க வழி செய்கிறது என்றாலும் சில ரவுட்டர்கள் ரிமோட் சிஸ்டம்களில் இருந்தும் இயக்க வழி செய்யும். இதை பயன்படுத்தி ஹேக்கர்களால் மிக எளிமையாக உங்களது நெட்வொர்க்கில் நுழைய முடியும்.

குறிப்பாக இந்த தாக்குதல் நடைபெற்றால் அனைத்து வலையமைப்புகளும் ரஷ்யாவின் கட்டுபாட்டுக்குள் வந்துவிடும், பின்பு தகவல் திருட்டு சம்பவமும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய நெட்வொர்க் ரவுட்டர்கள், சுவிட்சுகள், ஃபயர்வால்கள் மற்றும் நெட்வொர்க் ஊடுருவல் கண்டறிதல் அமைப்புகள் ஆகியவற்றை மீறுவதற்கு ரஷ்ய அரசு நிதியுதவி செய்யப்பட்ட ஹேக்கர்கள் முயற்சித்ததாக அமெரிக்க கூட்டு தொழில்நுட்ப விழிப்புணர்வு தெரிவித்துள்ளது.

ரஷ்யா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியது என்னவென்றால், இந்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊகங்களை ரஷ்யாவிற்கு எதிரான ஒரு பொறுப்பற்ற, ஆத்திரமூட்டும் மற்றும் ஆதாரமற்ற கொள்கையின் வேலைநிறுத்த உதாரணங்களாக நாங்கள் கருதுகிறோம்.

ரிமோட் அக்செஸ் ஆப்ஷனை செயலிழக்க செய்தால் மற்றவர்கள் உங்களது நெட்வொர்க்கில் நுழைவதை தடுக்க முடியும். இதை செய்ய வெப் இன்டர்ஃபேஸ் சென்று ரிமோட் அக்செஸ் அல்லது ரிமோட் அட்மினிஸ்ட்ரேஷன் ஆப்ஷன் சென்று மாற்ற முடியும்.

குறிப்பாக பல மில்லியன் இயந்திரங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன, பல நிறுவனங்கள் ஐளுP வாடிக்கையாளர்களை அணுகவும் ஹேக்கர்கள், நிறுவனங்கள் மற்றும் அவர்களது இணைப்புகளை உளவு பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இண்டர்நெட் பாதுகாப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இண்டர்நெட் இணைப்பை பயன்படுத்தும் அனைவரும் சைபர் சார்ந்த
அச்சுறுத்தல்களில் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாகியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment