ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பொருள்கள்-தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கு இடையில் தான் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் மளிகைப்பொருட்களை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் மீதான விசாரணையில் தமிழக அரசு இன்று பதில் அளித்தது.அதில், ரேசன் கார்டு இல்லையென்றாலும் ரூ.500 மதிப்பிலான மளிகைப்பொருட்கள் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும்  என்று தெரிவித்தது ,இதனால் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.