300 ஆண்டு கழித்து குடமுழுக்கு கண்ட வேணுகோபால சுவாமி..சிறப்பாக நடைபெற்றது..!

300 ஆண்டு கழித்து குடமுழுக்கு கண்ட வேணுகோபால சுவாமி..சிறப்பாக நடைபெற்றது..!

300 ஆண்டுகள் கழித்து ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில்க்கு கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக  நடைபெற்றது. வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் அருள்பாலித்து வரும் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. மதனாஞ்சேரி கிராமத்தில் 300 ஆண்டு காலமாக மிகத்தொன்மை வாய்ந்த இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊா் மக்கள் முடிவு செய்தனா். அதன்படி புனரமைப்பு  பணிக்காக சுமாா் ரூ. 3 கோடி செலவில்பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்பணிகள் எல்லாம் முடிந்த நிலையில் வேணுகோபால சுவாமி கோயிலில்க்கு மகா கும்பாபிஷேக விழாவனது கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் மங்கல இசையோடு தொடங்கியது. இதனைத்தொடா்ந்து முதல் கால பூஜை, வாஸ்து சாந்தி எனப் பல பூஜைகளும் சிறப்பு யாகங்களும் 4 நாட்களாக நடைபெற்று வந்தன.நேற்று அதிகாலை 4 மணியளவில் கணபதிபூஜை மற்றும் சுமங்கலி பூஜை அதனோடு 108 சங்காபிஷேகம் , கும்பஸ்தான பூஜை வெகுச்சிறப்பாக. சரியாக காலை 5 மணியளவில் கலச நீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் கோபுரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனால் அக்கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுத்தி உள்ள அனைவரும் என 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.]]>

Latest Posts

#வேளாண் மசோதா-பாரதம் முழுவதும் "பாரத் பந்த்"!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
பாலியல் குற்றம்-ஈடுபட்டாலே பிறப்புறுப்பு அகற்றம்! நைஜீரியா அதிரடி சட்டம்..
யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்...!
விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
#எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
#இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!