கொரோனா அச்சுறுத்தலால் ஈராக்கில் இருந்து ராணுவ வீரர்களை திரும்ப பெற்ற பிரான்ஸ்!

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் நிறைந்துள்ள நிலையில், கொரோனா வைரசால் பிரான்ஸ் நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனாவால் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கொரோனா வைரசால் பிரான்ஸ் அரசு பெரும் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலகம் முழுவதும் நிலவும் சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ஈராக் அரசு ஒத்துழைப்புடன் பிரான்ஸ் ராணுவ வீரர்களை தற்காலிகமாகத் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படைகளை திரும்ப பெறும் பணிகள் உடனடியாக தொடங்குகிறது.’ எனக் கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.