மலர் சந்தைகள் வழங்கம்போல் திறக்கப்படும்-மேற்குவங்க முதல்வர் மம்தா

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்றும்  அறிவிக்கப்பட்டது. இதனால்  பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

 இந்நிலையில் நாளை முதல் மலர்கள் சந்தை செயல்படும் என்றும் உள்ளூர் சந்தைகளில் பூக்களை விற்பவர்கள் இன்று  முதல் வேலையைத் தொடங்கலாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மொத்த விநியோகஸ்தர்கள் நேரடியாக சந்தைகளில் விற்று கொள்ளலாம்.  அவர்களை போலீசார் தடுக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.