இன்று தொடங்குகிறது பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் சேல்..! 7 ஸ்மார்ட் போன்களுக்கு செம ஆப்பர்..!

தற்பொழுது நடந்து முடிந்த பிக் பில்லியன் டே சேலை தொடர்ந்து, மீண்டும் பிளிப்கார்ட்

By surya | Published: Dec 01, 2019 06:12 PM

தற்பொழுது நடந்து முடிந்த பிக் பில்லியன் டே சேலை தொடர்ந்து, மீண்டும் பிளிப்கார்ட் நிறுவனம், பிக் ஷாப்பிங் டே விற்பனை வந்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், விற்பனையில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள் மற்றும் பல பொருட்களுக்கு நூற்றுக்கணக்கான சலுகைகள் உள்ளன. இந்த பிக் ஷாப்பிங் விற்பனை, டிசம்பர் 5 வரை நடைபெறும். ஐந்து நாள் விற்பனையில் தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்களில் no-cost EMI கட்டண விருப்பங்களும் அடங்கும். பிளிப்கார்ட், HDFC வங்கியுடன் இணைந்து 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. Image result for flipkart sale" தள்ளுபடி விலையில் வரும் மொபைல்கள்: ரியல்மி 5: இந்த ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை ரூ.9,999 ஆகும். இந்த விற்பனையில், இது ரூ.1000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.8,999 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும். ரியல்மி X: இதன் ஒரிஜினல் விலை ரூ.16,999 ஆகும். ஆனால் இந்த விற்பனையில், ரூ.1000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி S9: இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை ரூ.29,999 ஆகும். ஆனால் இந்த விற்பனையில், ரூ.2000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.27,999 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும். அதைபோல, சாம்சங் கேலக்ஸி எஸ் 9+ ஒரிஜினல் விலை ரூ.37,999 ஆகும். ஆனால் இது ரூ.3000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.34,999 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும். கூகுள் பிக்சல் 3: இந்த விற்பனையில், பெரிய அளவிலான தள்ளுபடியை பெறுவது இந்த கூகுள் ஸ்மார்ட்போன் தான். இதன் ஒரிஜினல் விலை ரூ.34,999 ஆகும். ஆனால் இந்த விற்பனையின் போது ரூ.5000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.29,999 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும். ஆப்பிள் ஐபோன் 7: இதன் ஒரிஜினல் விலை ரூ.27,999 ஆகும். ஆனால் இந்த விற்பனையின் போது ரூ.3000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும். ஆசஸ் 5 இசட்: இதன் ஒரிஜினல் விலை ரூ.16,999 ஆகும். இந்த விற்பனையின் போது, இது ரூ.1000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.15,999 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும்.
Step2: Place in ads Display sections

unicc