முதல் டெஸ்ட் : 3 விக்கெட்டை பறிகொடுத்து பங்களாதேஷ் பரிதாபம்..!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில்

By Fahad | Published: Apr 02 2020 03:11 PM

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இன்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் , இம்ருல் கயஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் 6 ரன்னுடன் வெளியேறினர்.பின்னர் இறங்கிய முகமது மிதுன் நிலைத்து நிற்காமல் 13 ரன்களுடன் வெளியேறினர்.இதனால் பங்களாதேஷ் அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. இந்நிலையில் பங்களாதேஷ் அணி 31 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து  71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது .இதில் இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.