குழந்தைகளின் திறமைகளை கண்டறிவது எப்படி

நமது குழந்தைகள் படிப்பிலும் அக்கறை செலுத்தவில்லை. வேறு எந்தவிதமான திறமைகளும் அவர்களிடம் இல்லை என நாம் யோசிப்பது மிகவும் தவறு. நமது குழந்தைகளின் திறமைகளை கவனிப்பதில் சற்று நாம் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் நமது குழந்தைகளுக்கு பல திறமைகள் இருக்கும் அதனை எவ்வாறு கண்டறியலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

திறமைகளை கண்டறியும் வழிகள்:

 

குழந்தைகளை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தமாறு அச்சுறுத்த கூடாது. அவர்களுக்குள் என்ன என்ன திறமைகள் ஒளிந்து கிடக்கிறது என்பதை நாம் கண்டறிய பல முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

திறமை இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது.திறமை அனைவரிடமும் இருக்கிறது.அதனை நாம் கண்டறியாமல் அப்படியே விட்டு விடுவதால் தான் நம் குழந்தைகளை நாம் திறமையில்லாதவர்கள் என கருதுகிறோம்.

இப்படி அவர்களை நாம் நினைப்பது முற்றிலும் தவறு.அவர்கள் எந்த துறைகளில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதனை நாம் தான் கண்டறிய வேண்டும்.

சில குழந்தைகளுக்கு ஓவியத்தில் நாட்டம் இருக்கும். சாதாரணமாக அவர்களின் கைகளில் பேனாவோ ,பென்சிலோ கிடைத்து விட்டால் அவர்கள் ஒரு பேப்பரை எடுத்து கிறுக்குவார்கள்.சில குழந்தைகளை பார்த்தால் வீட்டில் இருக்கும் சுவர்களின் மீது கிறுக்கி விளையாடுவார்கள்.அப்போது அவர்களிடம் ஓவிய திறமை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சில குழந்தைகளுக்கு பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும் உதாரணமாக டிவியில் பாடல்கள் ஒளிபரப்புவதை கேட்டால் அந்த இசைக்கு ஏற்றவாறு அவர்களும் பட ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே அவர்களிடம் பாடும் திறமை இருக்கிறது என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இதேபோல் அவர்கள் நகைசுவை செய்வது, நடனம் ஆடுவது, நடிப்பு திறமை என்ற திறமைகளை மிக எளிதாக அவர்களின் நடைமுறைகளை வைத்து கண்டறியலாம்.

சில குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்து சென்றாலே அவர்கள் மணலில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள். மேலும் அதில் வீடுகட்டி மற்றும் பல உருவங்களை அமைத்து விளையாடுவார்கள்.

இதனால் அவர்களுக்கு கட்டிடக்கலையில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த திறமைகளை வளர்க்க ஊக்குவிக்கலாம். இதேபோல் அறிவியல் சம்மந்தமான மற்றும் பல துறைகளில் அவர்கள் ஆர்வமாக இருப்பதை அவர்களின் நடைமுறைகளை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

திறமையை வளர்க்க எவ்வாறு  ஊக்குவிப்பது:

 

சில குழந்தைகளிடம் ஓவியம், நடிப்பு,பொருளை வைத்து விளையாடும் போது ஆராய்ச்சி செய்தல், நடனம், பாடும் திறமை முதலிய திறமைகள் குழந்தைகளிடம் இருப்பதை கண்டறிந்தவுடன் அவற்றை நாம் எவ்வாறு வளர்க்கலாம் என்பதை பற்றி யோசிக்க வேண்டும்.

அவர்களின் திறமைகள் சம்மந்தப்பட்ட போட்டிகள் எங்கெல்லாம் நடக்கிறது என்பதை பற்றி நாம் விசாரித்து அவர்களை அந்த போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஒப்பிடுதல் கூடாது :

 

மற்ற குழந்தைகளுடன் நமது குழந்தையை ஒப்பீடு செய்ய கூடாது. அவனை பார் நன்றாக பாடுகின்றான் ,நன்றாக ஓவியம் வரைகிறான், படிப்பில் முதல் இடத்தில் இருக்கிறான் என நமது குழந்தைகளை பிறகுழந்தைகளுடன் ஒப்பீடு செய்யகூடாது. அது நமது குழந்தைகளின் மனதை மிகவும் பாதிக்கும் மேலும் நம் மீது அதிகப்படியான வெறுப்புகள் வளர காரணமாக அமையும்.

தட்டி கொடுத்தல் :

தட்டிக்கொடுக்கும் பண்பு நமது குழந்தைகள் நம்மில் பாசமாக இருக்க மிக சிறந்த காரணியாக அமையும்.

குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்று பரிசுடன் வந்தால் அவர்களை தட்டி கொடுத்து பாராட்ட வேண்டும்.மேலும் இதே போல் பல பரிசுகளை வென்று வர வேண்டும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.உன்னால் முடியும் நீ சாதிப்பாய் எனும் மந்திரத்தை அவர்களுக்குள் புகுத்த வேண்டும்.

 

 

Leave a Comment