கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் புதிய கிடுபிடி!!

  • கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.
  • 48 மணி நேரம் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் உட்பட 91 மக்களவை தொகுதியில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.

திமுகமற்றும் அதிமுக இரண்டும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன மற்ற பகுதிகளை கூட்டணிக் கட்சிகள் பங்கிட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் மட்டுமே தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தல்  அதே தேதியில்தான் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது, வாக்குபதிவு நடைபெறும் 48 மணி நேரம் முன்பு வரை தேர்தல் அறிக்கையில மாற்றம் செய்து கொள்ளலாம். சரியாக 48 மணி நேரம் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.

author avatar
Vignesh

Leave a Comment