குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா ?

பொதுவாக நமது குடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அந்த வகையில் நமது குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நாம் எந்தெந்த உணவுகளை உன்ன வேண்டும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

நமது குடலில்  இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் நமது உடலில் பல வகையான நன்மைகளை செய்யும்.இந்நிலையில் பொதுவாக நமது குடலில் பல நல்ல மற்றும் நமது உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய சில நல்ல மற்றும் கெட்ட புழுக்கள் காணப்படும். நமது குடலில் இருக்கும் பல கெட்ட புழுக்கள் நமது  உடலில் செரிமான கோளாறு உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்தும்.

நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும்  குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பூண்டு , இஞ்சி ,அன்னாசி பழம் , ப்ரோக்கோலி , ஆப்பிள் சீடர் வினிகர் முதலிய பொருட்களை நாம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வது மிகவும்  நல்லது.