பல தடைகளை கடந்து உலகசாதனை படைத்த வாட்ஸ் ஆப் உருவான கதையை பற்றி உங்களுக்கு தெரியுமா

இன்றைய  உலகில் தோல்விகள் இல்லாமல் வெற்றிகளை சந்தித்த நபர்களே இருக்க முடியாது.அந்த வகையில் இன்று நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பல்வேறு தோல்விகளுக்கு பின்பு தான் நம் கையில் முழுமையாக ஒரு பொருளாக கிடைத்துள்ளது.

இன்றைய கால கட்டத்தில் மொபைல்களை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது.சிறு குழந்தைகளுக்கு கூட மொபைலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நன்கு தெரிகிறது. இந்நிலையில் நம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போனில் இருக்கும் வாட்ஸ் அப் எனும் செயலி உருவான கதை உங்களுக்கு தெரியுமா அதை பற்றி வாருங்கள் படிக்கலாம்.

வரலாறு:

வாட்ஸ் ஆப் எனும் செயலி இந்த உலகில் தற்போதைய நிலவர படி 1.2 பில்லியன் பயனாளர்களுக்கு மேல்  பயன்படுத்துகிறார்கள். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு மெசேஜ் மூலம் ஒரு தகவலை ஒரு நொடியில் கொண்டி சேர்க்கிறது இந்த செயலி.

உக்ரைனில் உள்ள ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர் ஜான் கோம்.இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.அதற்கு பின்னர் சில காரணங்களால் இவர் 1992 ஆம் ஆண்டு அவருடைய தாயாரையும்,பாட்டியையும் அளித்து கொண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மௌண்டைன் வியூ எனும் இடத்திற்கு சென்றார்.

அவர் அங்கு வந்தவுடன் ஒரு சோசியல் சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் 2 அறைகளை கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் தங்க இடம் கிடைத்தது.அத்தகைய காலகட்டத்தில் இவர் சாப்பிடுவதற்கு கூட மிகவும் கஷ்ட பட்டார்.

அதற்கு பிறகு இவர் தனது கம்ப்யூட்டர் அறிவை வளர்த்து கொண்டார்.ஒரு சாதாரண மளிகை கடையில் வேலைபார்த்து கொண்டு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் அறிவை வளர்த்து கொண்டார்.கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் பற்றி அனைத்தையும் கற்று தெளிந்து கொண்டிருக்கும் தருவாயில் அவருடைய அம்மாவிற்கு புற்றுநோய் என்பது அவருக்கு தெரியவந்தது.படிப்படியாக  முன்னேறி கொண்டிருக்கும் போதா இப்படி ஒரு சோதனை வரவேண்டும் என்று அவர் மனது தளரவில்லை. மீண்டும் போராடினர்.தன்னம்பிக்கையை விடவில்லை.குறிக்கோளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடவில்லை.

ஜான்  Sanjose state university யில் அவருடைய படிப்பை தொடங்கினார்.அதற்கு பிறகு இவருக்கு yahoo வில் infrastructure engineer வேலை கிடைத்தது.Sanjose state university ப்ரோக்ராமிங் படிப்பதை நிறுத்தி விட்டு yahooவில் முழுமையாக தங்களுடைய கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இதனையடுத்து  இவருக்கு பிரைன் அக்டான் நண்பராக கிடைத்தார்.இருவரும் இணைந்து யாஹூவில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார்கள்.அதன் பின்னர் ஜான் கோம் 2009 ஆம் ஆண்டு ஒரு ஐ போனை வாங்கினார்.அப்போது அவர் ஒரு முடிவை எடுத்தார் எப்படியாவது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் செயலியை உருவாக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்கள்.

முக்கிய குறிக்கோள்:

 

அந்த செயலில் 3 முக்கிய குறிக்கோள்களை பின்பற்றவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்கள்.

1.விளம்பரப்படுத்தக்கூடாது.

2.பயனர்களுக்கு நல்ல மனநிறைவான அனுபவத்தை கொடுக்க வேண்டும்.

3.பயனர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.

மேலும் பயனர்களின் தகவல்களை ஸ்டார் செய்யாமல் அவர்களின் தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ந் தேதி கலிபோர்னியாவில் ஜான் மற்றும் பிரைன் அவர்களின் செயலிக்கு வாட்ஸ் ஆப் எனும் பெயரை வைத்தார்கள்.

இந்த செயலி பல பயனர்களுக்கு உதவும் வகையில் அமைந்தது.ஆனால் சில மாதங்களில் இது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்க வில்லை.

உடனே இந்த செயலியை விட்டு விடலாம் என ஜான் முடிவெடுக்க நினைத்தார்.உடனே பிரைன் அவரை அழைத்து மனம் தளர வேண்டாம் தன்னம்பிக்கையுடன் உறுதியாக இருப்போம் என்று ஆறுதல் கூறினார்.

உடனே இவர்களின் புஷ் நோட்டிபிகேஷன்களை பல மாதங்களாக கவனித்த ஐ போன் நிறுவனம் இவர்களை அழைத்து உதவி செய்ய முன்வந்தது. ஜான் பிரையனிடம் உதவி கேட்டு 250,000 டாலரை யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்களிடம் இருந்து உதவியாக பெற்றார்.அதற்கு பிறகு ஜான் வாட்ஸ்  ஆப்பின் கோ பவுண்டராக மாறினார்.

அதற்கு பிறகு இவர்களின் பிரம்மாண்ட வளர்ச்சியை பார்த்து உடனே வாட்ஸ்  ஆப் செயலியை 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 பில்லியன் டாலரை கொடுத்து  பேஸ் புக் நிறுவனம் கைப்பற்றியது. நாம் கடினமாக உழைத்தால் எந்தவொரு விஷயத்திலும் சாதிக்கலாம் என்பதை இவர்களின்  கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

Leave a Comment