டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : ராமேஸ்வரம்  அழைத்து சென்று விசாரிக்க முடிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயக்குமார், ஓம்காந்தனை ராமேஸ்வரம்  கொண்டு சென்று சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக  முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் அரசு ஊழியர் ஒம்காந்தன் ஆகியோர் 6 நாட்கள் போலீஸ் காவலில் உள்ளனர். இந்நிலையில் காவலில் எடுக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ஓம்காந்தனை ராமேஸ்வரம் கொண்டு சென்று சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.