கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை குறைக்க டெல்லி அரசு மேற்கொண்ட முயற்சி!

கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை குறைக்க டெல்லி அரசு மேற்கொண்ட முயற்சி.

இந்தியா முழுவதும் ககொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், 10 பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைகளில் அதிக இறப்பு விகிதத்தை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது.

டெல்லியில் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதலமைச்சர் சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டார்.  இந்நிலையில், இந்த குழுக்கள், கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் மற்றும் வைரஸ் பரவுவது குறித்த அறிக்கைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சமர்ப்பித்துள்ளன.

 அதிகமான கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆய்வு செய்ய, ஜூலை மாதம் டெல்லியில் 10 மருத்துவமனைகளை கண்காணிக்கும் குழுக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

சோதனைகளின் போது, ​​முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது அனைத்து மருத்துவமனைகளிலும் இறப்பு விகிதம் குறைந்துவிட்டதாக இந்த குழுக்கள் கண்டறிந்துள்ளன என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், முதல்வர் கெஜ்ரிவால், சுகாதாரத் துறைகளும், குழுவும் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியத்திற்குக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.