கண்ணில் கருமை நிற டாட்டூ.! பார்வையை இழந்த இளம்பெண்.!

போலந்து நாட்டில் கண்களில் கருமை நிற டாட்டூ போட்டு பார்வையை இழந்து

By balakaliyamoorthy | Published: Feb 28, 2020 04:34 PM

  • போலந்து நாட்டில் கண்களில் கருமை நிற டாட்டூ போட்டு பார்வையை இழந்து தவிக்கும் இளம்பெண்.  
போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரை சேர்ந்த 25 வயது மாடலான அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற இளம்பெண், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக் என்பரின் ரசிகையாகவும் இருக்கிறார். போபெக் தனது 2 கண்களில் கருநிற டாட்டோவை போட்டிருப்பார். அதுபோன்று தனக்கும் கண்களில் டாட்டூ போடவேண்டும் என்று அலெக்சாண்ட்ரா, டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார். கண்களில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத போதிலும், பணத்திற்காக  அந்த நபர் பொய் சொல்லி டாட்டூ போட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த இளம்பெண்ணின் கண்களில் டாட்டூ போட்டு முடித்தவுடன், கண்கள் எரிச்சலாகவும், வலிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் வலி மருந்து ஒன்றை கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த நிலையில் தனது இடது கண்ணின் பார்வையை அந்த இளம்பெண் இழந்துள்ளார். பின்னர் உடனே மருத்துவரிடம் சென்ற அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கண்ணில் கருமை நிற பரவியுள்ளதால் சரிசெய்ய முடியாது கூறிவிட்டனர். மேலும் விரைவில் மற்றோரு கண்ணின் பார்வையும் இழக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலாந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பி டாட்டூ போட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc