கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்காக தேசிய அளவில் துக்க தினத்தை இன்று அனுசரிக்கிறது சீனா…

சீனாவில் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போடு உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதன் காரணமாக உலகமே அதிர்ந்து போய் உள்ளது. உலக வல்லரசு அமெரிக்கா முதல் இத்தாலி, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, வளைகுடா நாடுகள்  வரை வளர்ந்த நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டது.  சீனாவின் ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததால், மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 4ஆம் தேதியான  இன்று தேசிய அளவில் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

author avatar
Kaliraj