#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,169 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக மதுரையில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் 40 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 596 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று கொரோனவால் சென்னையில் பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, 50 வயதிற்கு கீழ் உள்ள 10 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மேலும், 80-70 வயதிற்கு உட்பட்ட 14 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.