டெல்லியில் குறையும் கொரோனா.. ஒரே நாளில் 954 பேர் பாதிப்பு!

டெல்லியில் ஒரே நாளில் 954 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,23,747 ஆக உயர்வு.

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அங்கு புதிதாய் 954 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,23,747 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,784 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,04,918 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,663 ஆக அதிகரித்துள்ளது.  டெல்லியில் 15,166 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.