பிஎஸ்-6 என்ஜினுடன் வருகிறது, பெண்கள் மனதை கொள்ளைக்கொள்ளும் வெஸ்பா..!

  • வெஸ்பா நிறுவனம், தனது பிஎஸ்-6 ரக ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
  • இது, அனைத்து ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் கேடிஎம், ராயல் என்பீல்ட், என நீறைய பைக்குகள் இருக்கும். அதைப்போலவே, பெண்கள் மனதை “வெஸ்பா”– ரக ஸ்குட்டர் கொள்ளை கொண்டுள்ளது. அதற்க்கு காரணம், அதன் ஸ்டைல் மற்றும் சௌகரியமான சீட்டிங் பொசிஷனே ஆகும். தற்பொழுது இதில் பிஎஸ்-6 ரக என்ஜினுடன் இந்த வண்டி அறிமுகமாக உள்ளது. அதைப்பற்றி காணலாம்.

Image result for vespa vxl and sxl"

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமம், இந்தியாவில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா பிராண்டில் பிரிமீயம் ரக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கான காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், பெரும்பாலான வாகனங்கள் தங்களது பிஎஸ்-6 ரக வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், வெஸ்பாவும் தனது புதிய பிஎஸ்-6 ரக ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

Image result for vespa vxl and sxl"

வெஸ்பா நிறுவனத்தின் SXL மற்றும் VXL ரக மாடல்களை விற்பனை செய்யப்படும் 125 சிசி மற்றும் 150 சிசி எஞ்சின்களும் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரக ஸ்கூட்டர்களில், பிஎஸ்-6 தரத்திற்காக கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for vespa vxl and sxl instrumental cluster"

இந்த புதிய பிஎஸ்-6 மாடல்கள் இன்று முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை பற்றிய விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த வெஸ்பா ரக ஸ்குட்டர்கள், ரூ.73,000 முதல் ரூ.1.01 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இன்று முதல் ஷோரூம்களில் புதிய பிஎஸ்-6 எஞ்சின் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.