எதிர்பார்க்கப்பட்ட புதிய அம்சங்களுடன் வருகிறது வாட்ஸ்ஆப்..!

வாட்ஸ்ஆப், ஒருமுறை டவுன்லோட் செய்யப்பட்டு ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட மீடியா பைல்களை, மீண்டும் டவுன்லோட் செய்யும் புதிய அம்சத்தினை  அறிமுகம் செய்த்தது. அதற்கு அடுத்தபடியாக வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் ‘ரெக்வெஸ்ட் மணி‘ என்கிற அம்சம் காணப்பட்டது.

ஒரு பயனர் தங்கள் நண்பர்களிடமிருந்தும், மொபைல் தொடர்புகளிலிருந்தும் பணம் அனுப்பமாறு கோரிக்கைகளை நிகழ்த்த அனுமதிக்கும் ‘ரெக்வெஸ்ட் மணி’ அம்சமானது எப்போது பொது பயனர்களுக்கு உருட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலைப்பாட்டில், வாட்ஸ்ஆப் நிறுவனம், சத்தமின்றி அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் “டிஸ்மிஸ்” அம்சத்தினை இணைத்துள்ளது.

வாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் 2.18.41 வெர்ஷன் மற்றும் ஆண்ட்ராய்டின் 2.18.116 வெர்ஷனில் ஒரு புதிய அம்சம் காணப்பட்டுள்ளது. “டிஸ்மிஸ் அஸ் அட்மின்” என்கிற பெயரை கொண்டுள்ள அந்த அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உள்ள சக அட்மினை டிஸ்மிஸ் செய்யும் உரிமையை அட்மின்களுக்கு வழங்கும்.

முன்னரே எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சமானது மிகவும் தாமதமாகவே கிடைத்துள்ளது என்பதும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக பரிசோதிக்கப்படும் என்று என்று கூறப்பட்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த அம்சத்தை சோதிக்க, க்ரூப் இன்ஃபோ சென்று > மெம்பரின் ப்ரொபைல் விவரத்தை டாப் செய்யவும். பின்னர் பட்டியலிடப்படும் விருப்பங்களில் “டிஸ்மிஸ் அஸ் அட்மின்” விருப்பமும் காட்சிப்படும். அந்த விருப்பத்தை டாப் செய்ய குறிப்பிட்ட மெம்பரின் அட்மின் பதவி திரும்பப் பெறப்படும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment