அத்திவரதர் கோவில் வளாகத்தில் பிரசவம் !

காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பக்தர்களுக்கு

By murugan | Published: Aug 14, 2019 11:02 AM

காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதை அடுத்து கடந்த மாதம் ஜூலை 1-ம் தேதியில் இருந்து இன்றுடன் 45 நாள்களாக  காட்சியளித்து வருகிறார். நாளை மறுநாளுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது. இதனால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் .இந்நிலையில் இன்று விஜயா என்ற கர்ப்பணி பெண் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்து உள்ளார். அத்திவரதரை தரிசனம் செய்ய கர்ப்பணிகளுக்கான சிறப்பு வரிசையில் சென்று அப்பெண் தரிசனம் செய்து வெளியே வந்தார்.அப்போது விஜயாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதனால் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் அப்பெண்ணை அனுமதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.அக்குழந்தை 3 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாகவும் , மேலும் தாயும் ,சேய்யும்  நலமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc