22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கிய முதலமைச்சர்.!

22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இன்று அடையாளமாக 3 நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தில், ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவு பொருள் உற்பத்தி விநியோகம் செய்ய முன்வரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில்,  விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 3 உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk