ஈரான் சிறையில் உள்ள தமிழரை மீட்கக்கோரி தமிழக முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

Tamil Nadu Chief Minister writes letter to Foreign Minister

ஈரான் சிறையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மாலுமி ஆதித்ய வாசுதேவனை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளார்.    ஈரான் அருகே கடந்த மாதம் 19ஆம் தேதி  ஆதித்ய வாசுதேவன் உள்ளிட்ட 18 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.ஆதித்ய வாசுதேவன் என்பவர் சென்னையை சேர்ந்த மாலுமி  ஆவார்.இவருக்கு வயது 27 ஆகும். இந்த நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் ஆதித்ய வாசுதேவன் உள்பட சிறைபிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார்.   

Chief Minister Palanisamy has written to Union Minister of External Affairs Jaishankar urging the release of Aditya Vasudevan, a Tamil sailor in the Iranian prison. Aditya Vasudevan, 18, was arrested near Iran on the 19th of last month, including Aditya Vasudevan, aged 27, a Chennai sailor. Chief Minister Palanisamy has written a letter to Union Minister of State Jaishankar demanding action to release 18 Indian nationals including Aditya Vasudevan.