உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்- சிதம்பரம்

உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்குத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதனால் வேலை செல்ல முடியாமல் பல்வேறு மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், வேலை இல்லாமல்,பணத்தை இழந்து  உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.ஏழை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பணம்  அளித்தால்  அவர்களை பசியில் இருந்த காப்பாற்ற முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.