சளி தொல்லையில் இருந்து பூரண சுகம் தரும் கற்பூரவள்ளி டீ!

சளி தொல்லையில் இருந்து பூரண சுகம் தரும் கற்பூரவள்ளி டீ.

இன்று பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இன்று சளி பிரச்சனைகள் உள்ளது. இதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும், முழுமையான சுகம் கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில், சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன இயற்கையான முறையில், கற்பூரவள்ளி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கற்பூரவள்ளி இலைகள் – 5
  • இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன்
  • டீத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – தேவையான அளவு
  • தேன் – தேவைக்கு
  • தண்ணீர் – 2 கப்

செய்முறை

முதலில், கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.  பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் வடிகட்டி, தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் நீங்கி விடும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.