BRAEKING NEWS:காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்!தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் !

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் எனக்கோரி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. வரைவு திட்டம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை செவ்வாய்கிழமைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் என்ன செய்தது மத்திய அரசு என்பது பற்றி பிரமாணபத்திரம் தாக்கல் வேண்டும். கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்கமுடியாது.காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம்.தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை என்று கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “தற்போது செயல் திட்டம் அமலில் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறப்பது கர்நாடக அரசின் கடமை” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார்.கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கும் அளவிற்கு போதிய நீர் இல்லை என்று சித்தராமையா தெரிவித்தார்.

சற்று முன் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது காவிரி வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடகா அரசு அறிக்கை தாக்கல் செய்தது.தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அறிக்கை தாக்கல் செய்துள்ளது . மழை பற்றாக்குறையால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் கர்நாடகா அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறக்கபட்டுள்ளது.தற்போது கர்நாடக மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது என்று கர்நாடகா அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.மேலும் மனுவில்  காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசிற்கு ஆணையிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் தற்போது 19 டிஎம்சி தண்ணீர் உள்ளது, தமிழக அணைகளில் சுமார் 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும்  தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழகம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment