தீபாவளி முன்னிட்டு அரசு விரைவுப்பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம் ..!

சென்னை உட்பட பல பெரு நகர பகுதிகளில் வேலை செய்யும் பொதுமக்கள் பண்டிகை காலங்களில்

By murugan | Published: Aug 27, 2019 10:36 AM

சென்னை உட்பட பல பெரு நகர பகுதிகளில் வேலை செய்யும் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதால் சிறப்பு பேருந்து மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களை போக்குவரத்துத்துறை சார்பில் செய்து வருகின்றன. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 60 நாளுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதியை அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பட்டு செய்து உள்ளது. அதன்படி தமிழக அரசு விரைவுப்பேருந்துகள் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. ,www.tnstc.in ,www.redbus.in, www.paytm.in ஆகிய தலங்களை பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி சிறப்பு பேருந்து மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc