மறைந்த சுஷாந்த் சிங்கின் நினைவாக 550 குடும்பங்களுக்கு உணவளிக்கும் பிரபல பாலிவுட் நடிகை.!

நடிகர் சுஷாந்த் சிங்கின் நினைவாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு

By ragi | Published: Jun 30, 2020 07:49 PM

நடிகர் சுஷாந்த் சிங்கின் நினைவாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவளிக்க உள்ளதாக பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஜூன் 14அன்று  இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வருவதோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் குறித்த செய்திகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங்குடன் 'Sonchiriya' படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகையான பூமி பெட்னேகர், மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்  550 வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உணவளிக்கவுள்ளதாக கூறியுள்ளார். சுஷாந்த் சிங்கின் கேதார்நாத் பட இயக்குநரான அபிஷேக் கபூரின்  பிரக்யா நடத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஏக் சாத்:தி எர்த் பவுண்டேஷனுடன் இணைந்து வறுமையில் வாடும் 550 குடும்பத்திற்கு தனது அன்பான நண்பரின் நினைவாக உணவளிப்பதாக கூறியுள்ளார். முன்பை விட இப்போது அனைவரிடமும் அன்பையும், இரக்கத்தையும் காட்டுவோம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அபிஷேக் கபூர் தனது மனைவியுடன் இணைந்து 3400 குடும்பங்களுக்கு உணவளித்து சுஷாந்த் சிங்கிற்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc