கொரோனா சிகிச்சைக்கு BDC தடுப்பூசி - அமைச்சர் விஜயபாஸ்கர்

BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

By balakaliyamoorthy | Published: Jun 06, 2020 07:45 AM

BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் BCG தடுப்பூசி மூலம் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சை, remdesivir மருந்துகளை தொடர்ந்து BCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார். 

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டு வருகிறது. உயிரிழப்பு, பரிசோதனைகளை குறைத்துச் சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கொரோனா செய்திக்குறிப்பை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc