ஆகஸ்ட் 15 முதல்…! முக்கிய அறிவிப்பு! வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் பேட்டி!

தமிழ்நாட்டில் அவ்வபோது அந்நிய குளிர்பானங்களுக்கு எதிர்ப்பு பெருகி வருகிறது. மக்கள் தற்போது ஆர்வமுடன் இயற்கை பானங்களை அதிகம் விரும்பி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இயற்கை குளிர்பானங்களான நுங்கு, பதநீர், கரும்புச்சாறு,பழச்சாறு போன்ற பானங்கள் மக்களிடையே அதிகமாக விரும்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் விழுப்புரத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது ‘தமிழகத்தில் ஆகஸ்ட் 15 முதல் அந்நிய குளிர்பான பொருட்களான பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்’ என அறிவித்தார். இந்த அறிவிப்பு இயற்கை குளிர்பான வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment