தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரை உபயோகிக்க தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தலப்பாகட்டி பிரியாணி நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் பல இடங்களில் பிரியாணி கடைகள் உள்ளது. இதனால், மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், “மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தங்களது உணவகமான தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று தலப்பாகட்டி உணவகத்தின் பங்குதாரர் நாகசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரபலமான தலப்பாகட்டி என்ற பெயர் மற்றும் அதன் அடையாளங்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று 7 உணவகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், ஜூன் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உணவகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment