இதுவரை 5 சதங்களை மட்டுமே அடித்து உள்ள பங்களாதேஷ் அணி!

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 333 ரன்கள் எடுத்து 48  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.இப்போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர் முஷ்பிகுர் நிதானமாக விளையாடி 97 பந்தில் 102 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இதுவரை நடந்த உலக கோப்பையில் பங்களாதேஷ் அணியை சேர்ந்த வீரர்கள் எத்தனை முறை சதம் அடித்து உள்ளார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி அப்பட்டியலில் பங்களாதேஷ் அணி இதுவரை உலகக்கோப்பையில்  5 சதங்களை மட்டுமே அடித்து உள்ளது.அதில் மஹ்மதுல்லா 2015-ம் ஆண்டு இரண்டு முறையும் , 2019-ம் ஆண்டு ஷாகிப்  இரண்டு முறையும் , முஷ்பிகுர் ஒரு முறையும் சதம் அடித்துள்ளனர்.
Mahmudullah vs Eng (2015)
Mahmudullah vs NZ (2015)
Shakib vs Eng (2019)
Shakib vs WI (2019)
Mushfiqur vs Aus (2019)*
 

author avatar
murugan