வங்கதேசத்தில் பரபரப்பு! பாலியல் புகார் கொடுத்ததால் தலைமையாசிரியர் மாணவியை எரித்துக் கொன்ற வழக்கு!

கடந்த மார்ச் மாதம் வங்கதேசத்தில் ஒரு பள்ளி தலைமையாசிரியர் மீது ஒரு மாணவி பாலியல் போலீசில் புகார் அளித்திருந்தார். அதாவது அந்த மாணவியிடம் தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்து தவறாக நடந்துகொண்டதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் கைது செய்யபட்டுள்ளார்.

இதனால் கோபமுற்ற தலைமையாசிரியர் சிறையிலிருந்தபடியே மாணவியை கொல்ல திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு எழுத வந்த அந்த மாணவியை சிலர் இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளனர். இதில் பலத்த தீ காயமுற்று அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு, இறப்பதற்கு முன்னால் கடைசி வாக்குமூலம் அளித்து விட்டு அவர் இறந்துவிட்டார்.

இந்த வழக்கில் தலைமையாசிரியர், கொலைக்கு திட்டமிட்டவர்கள் என மொத்தம் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் இரண்டு உள்ளூர் அரசியல்வாதிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்த குற்றத்தை தலைமையாசிரியரும், மாற்றதில், 12 பேர்களும் ஒப்புக்கொண்டனர். இரன்டு அரசியல்வாதிகள் மட்டும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த மாணவி ரஃபி இறந்ததை அடுத்து வங்கதேசத்தில் பல போராட்டங்கள் வெடித்தன. இது குறித்து பேட்டி அளித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், ‘ குற்றவாளிகள் யாரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது அவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர்’ கூறினார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment