ரூ.3 கோடியே 40 லட்சம் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் ஆஸ்திரேலிய சிறுவன்.!

  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த ரூ.3 கோடியே 40 லட்சம் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது குவாடன் சிறுவனை குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அப்போது அந்த சிறுவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் இணையத்தில் கருத்து பதிவிட்டர்.

இந்த நிலையில் அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் சிறுவனுக்காக உருவாக்கிய பக்கத்தின் மூலம் 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர்,  இந்திய மதிப்பில் ரூ.3 கோடியே 40 லட்சம் நன்கொடை வசூலிக்கப்பட்டது. பின்னர் குவாடனையும் அவனது தாயையும் டிஸ்னிலாண்டுக்கு அனுப்ப திரட்டப்பட்ட இந்த நிதியை, பணத்தின் தேவை அதிகம் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு வழங்க உள்ளதாக அவரது தாய் யர்ராகா பேல்ஸ் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்